வாக்களிக்க யாழ்.ஆயர் அழைப்பு!



நேரகாலத்துடன் தேர்தல் நிலையத்திற்கு சென்று உங்கள் வாக்குக்களை போடுங்கள் என யாழ் ஆயர் கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயக உரிமை. இந்த உரிமையை மக்கள் அனைவரும் எவரின்; கட்டாயமுமின்றி தெளிந்த மனதுடனும் தீர்க்கமான முடிவுடனும் பயன்படுத்;த வேண்டும்.

தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்றோ அல்லது தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்றோ ஜனநாயக சூழலில் யாரையும் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. தேர்தலைப் புறக்கணிப்பதால் இழப்படையப் போவது தேர்தலைப் புறக்கணிப்பவர்களே அன்றி வேறுயாருமல்ல. ஒருபோதும் வெல்ல மாட்டார்கள் எனத்தெரிந்தும் அவர்களை களத்தில் இறக்கி வாக்குக்களை சிதறடிக்க பல வேட்பாளர்களை களமிறங்குவது தேர்தல் இராஜதந்திரம் எனக்கருதப்பட்டாலும் இலங்கை நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தையும் விரும்பாதவர்களின் செயற்பாடகவே இது கருதப்பட வேண்டும்.

அரசியற் கட்சிகளும் ஊடகங்கள் கருத்துருவாக்கும் பணியில் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளப்படலாம். அந்த கருத்துருவாக்கத்தில் இருந்து மக்கள் யாருக்கு வாக்களிக்கலாம் என்ற நல்ல முடிவுகளை எடுக்க உதவலாம். நேரடியாகவே இவருக்கு வாக்களியுங்கள் என்றோ அல்லது இவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றோ வேண்டுவது சரியானதல்ல.
தமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

தேர்தல் விஞ்ஞாபனங்கள் அனேக விடயங்களை எடுத்து சொல்லுகின்றன. எந்த தேர்தல் விஞ்ஞாபனத்திலும் வெளியிடப்பட்ட விடயங்கள் ஒருபோதும் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் இல்லை.

தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரத்தக்க நல்ல தலைவரை இனம் கண்டு தகுதியானவருக்கு வாக்களிங்கள் என்று தமிழ் மக்கள் அனைவருக்கும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.

இன்றுவரை தெரியப்படுத்தப்பட்ட கருத்துக்களை வைத்து நல்ல முடிவினை எடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறோம். யார் இதய சுத்தியுடன் துணிவாக விடயங்களை நகர்த்துவார்கள் - பாரபட்சமின்றி தமிழ் மக்களின் தேவைகளை நிறைவு செய்;வார்கள் என்பதை தெளிவாக கணிப்பிட்டு வாக்களியுங்கள். நேரகாலத்துடன் தேர்தல் நிலையத்திற்கு சென்று பதட்டமின்றி நிதானமாக உங்கள் வாக்குக்களை செல்லுபடியான வாக்குகளாகப் போடுங்கள்.

எந்த அசம்பா விதமுமின்றி தேர்தல் நடைபெறவும் இலங்கை நாட்டிற்கும் குறிப்பாக இலங்கை வாழ் தமிழ் மக்களிற்கும் நல்லதை செய்யக்கூடிய நல்ல தலைவர் தெரிவு செய்யப்படவும் இறையாசீர் வேண்டுகிறோம என கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

No comments