சஜித்திற்காக காத்திருக்கும் விக்னேஸ்வரன்?


புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் வரை, ஐந்து தமிழ்க்கட்சிகளும், அதிபர் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவிக்காது என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
”அதிபர் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பாக முடிவெடுப்பதற்காக, ஐந்து தமிழ்க்கட்சிகளும் நேற்று கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தன.
எனினும், மீண்டும் நாளை  கூடி இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை வரும் 31ஆம் நாளே வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் நாளை ஐந்து தமிழ்க் கட்சிகளின் கூட்டத்திலும், இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.

No comments