வருகிறார் கோத்தா:மகிழ்ச்சியில் வரதர்?


எல்பிட்டியவில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் தலைமையிலான பொதுஜன முன்னணி 17 வட்டாரங்களையும் கைப்பற்றியது. அதே சமேயம் சஜித் பிரேமதாச தலைமைதாங்கி ஒரு ஆசனங்களை பெறவில்லை என்பதுடன் பெற்றுக்கொண்ட வாக்குக்கு அமைவாக 7 போனஸ் ஆசனங்களை மட்டும் பெற்றுக்கொண்டதாக முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

42,100வாக்குகள் செலுத்தப்பட்டிருந்த நிலையில் பொதுஜன முன்னணி 23,372 வாக்குகளும், ஐ.தே.க 10,113 வாக்குகளும், சுதந்திர கட்சி 5,273 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

பொதுஜன முன்னணி மற்றும் சுதந்திர கட்சி இணைந்து சுமார் 69விகித வாக்கினை பெற்றுக்கொண்டுள்ள அதே சமயம் ஐக்கிய தேசிய கட்சி 24.3விகித வாக்கினை மட்டும் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதென வரதராஜப்பெருமாள் தகவல் பகிர்ந்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் கோத்தாவை ஆதரிக்கின்ற வரதராஜப்பெருமாள் தனக்கு தேசியப்பட்டியலில் கோரியுள்ளமை தெரிந்ததே.

No comments