மணியம்தோட்ட கொலை சந்தேக நபர் பொலிஸில் சரண்

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறையில் குடும்பஸ்தரை கோடரியால் அடித்துக் கொன்ற விவகாரத்தில் தேடப்பட்டு வந்த இளைஞன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இன்று (22) காலை, விமல்ராஜ் என்ற சந்தேகநபரே (வயது 33) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

கடந்த 15ஆம்  திகதி, மணியம்தோட்டம் 2ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த கலஸ்ரன் (வயது 33) என்ற குடும்பஸ்தர் கோடரியால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தார்.

குறித்த சம்பவத்துக்கு நீண்டகால முரண்பாடே காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. மேலும் கொல்லப்பட்டவரின் மச்சானான அதே இடத்தைச் சேர்ந்தவரே கொலையை புரிந்துவிட்டு தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையிழல் அவரை தேடும் பணியில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வந்திருந்த நிலையிலேயே இன்று  சந்தேகநபர் சரணடைந்துள்ளார்.

No comments