நாலாம் மாடியல்ல:இனி இரண்டாம் மாடி?


ஊடகவியலாளர்களை விசாரணைக்கென கொழும்புக்கு அழைக்கும் இலங்கை காவல்துறை தற்போது முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களை அழைக்க தொடங்கியுள்ளது.

அவ்வகையில் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான ஆண்டி ஐயா புவனேஸ்வரனை பயங்கரவாத தடுப்புப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணையொன்றிற்காக கொழும்பு காவல்துறை தலைமையக இரண்டாம் மாடி விசாரணைப்பிரிவிற்கு சமூகமளிக்கவே அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

No comments