ஜனாதிபதி கனவில் 13பேர்?


ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதுடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை, 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனரென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று (30) நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
கெடகொட கமகே ஜயந்த பெரேரா, சிறிபால அமரசிங்க, அஜந்தா விஜேசிங்க பெரேரா, அபரெக்கே புஞ்ஞானந்த தேரர், வெலிசரகே சமன் பிரசன்ன பெரேரா, நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷ, ஆரியவங்ச திஸாநாயக்க, சிறிதுங்க ஜயசூரிய, வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜியஸ் பெர்ணான்டோ, ரொஹான் பல்லேவத்த, சரத் மனமேந்திர, பல்லெவத்த கமராலலாகே , நம்புநாம நாணாயக்கார பல்லியகுருகே, வஜிரபானீ விஜேசிறிவர்தன ஆகியோர் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை,  அடுத்த மாதம் 6 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments