வெள்ளி தெரியும்:கோத்தா வேட்பாளரா,இல்லையா?


கோத்தாபாய ராஜபக்சவின் சிறிலங்கா பிரஜா உரிமை சிக்கலில் வந்து முடிந்துள்ளது. இரட்டைக்குடியுரிமை பெறும்போது போலி கையெழுத்து போலி ஆவணம் பயன்படுத்தி சிறிலங்கா குடியுரிமை பெற்றதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பான தீர்ப்பு வெள்ளியன்று வெளியாகவுள்ளது.

தீர்ப்பு கோட்டாவுக்கு எதிராக வரும்பட்சத்தில், கோத்தா ' நாடற்ற பிரஜையாக ' சிறிலங்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் குற்றவாளியாக அடையாளம் காணப்படுவார் எனவும் அவர் சட்டவிரோத குடியேறிகள் தடுப்புமுகாமுக்கே அனுப்பப்படுவார் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனிடையே இலங்கை பிரஜை என கோத்தா வெளியிட்டுள்ள ஆவணத்தில் இலங்கை என்பதற்கு பதில் நுகேகொடவென அச்சிடப்பட்டுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments