மகேஸ் பிரச்சாரத்திற்கு யாழ்.வருகை?


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க தனது பிரச்சார நடவடிக்கைகளிற்காக யாழ்.வருகை தரவுள்ளார்.முன்னதாக திங்கள் கோத்தபாய யாழ்.வருகை தரவுள்ள நிலையில் தொடர்ந்து மகேஸ்சேனநாயக்கவின் யாழ்.விஜயம் அமையவுள்ளது.

இதனிடையே ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ, கோட்டாபாய ராஜபக்ஷ ஆகியோரின் முகாம்களில், திருடர்களும் இனவாதிகளுமே உள்ளனர். அவர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதால் நாடும், நாட்டு மக்களும் பாரிய ஆபத்தையே எதிர்நோக்க நேரிடும் என்றும், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக தெரிவித்துள்ளார்.

இன்று நாட்டில் கேள்விக்குறியாகவுள்ள தேசியப் பாதுகாப்பு,  மக்கள் பாதுகாப்பு என்பன முறையானத் திட்டமிடலுடன் சீரமைப்பதற்கான வழிவகைகளை நாம் கொண்டு வருவோம். இந்த நாட்டில் இனி யுத்தமும் வேண்டாம், முரண்பாடுகளும் வேண்டாம். எமது குழந்தைகள் நிம்மதியாகவும் ஒற்றுமையுடனும் ஐக்கியத்துடனும் வாழக் கூடிய சுதந்திர தேசமொன்றை கட்டியெழுப்புவதே, எமது பிரதான நோக்கமாகும்.  

“ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலின் பின்னர், நாட்டின் பாதுகாப்பு சம்பந்தமாக அதிக அக்கறை செலுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கின்ற இவ்வேளையில், எதிரணியில் இருக்கின்ற இரு பிரதான வேட்பாளர்களும் ஆட்சி அதிகாரத்தைக் கோரி நிற்கின்றார்கள். இவர்களும் இவர்களின் குடும்பத்தினரும்தான், கடந்த 71 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆட்சி செய்து வந்தார்கள்.

“இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் சமூக நல்லிணக்கமும் சமூகப் புரிந்துணர்வுடன் கிறிஸ்தவ, தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாகவும், சம அந்தஸ்துடனும் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும். இந்த நாட்டில் மிகப் புனிதமான சேவையை செய்து வருகின்ற இலங்கை பெலிஸார், அவருடைய சேவைகளை திறம்படச் செய்வதற்கு அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கின்ற காரணத்தால் சரிவர செய்ய முடியாமல் திணறுகிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments