அனந்தி,சிவாஜி பின்னாலே யார்?


ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

அவர் சார்பில் முன்னாள் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கட்டுப்பணத்தை இன்று தேர்தல் திணைக்களத்தில் செலுத்தியிருந்தார்.

தமிழ் தரப்பில் பொது வேட்பாளரை களமிறக்க பேச்சுக்கள் நடத்தப்பட்டு வந்திருந்த நிலையில் நேற்றிரவு யாழ்.பல்கரைக்கழக மாணவர் ஒன்றியம் கூட்டி அனைத்து கட்சி கூட்டத்தில் இம்முடிவு கைவிடப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே நேற்று குமரப்பா-புலேந்திரன் நினைவேந்தலை முன்னின்று நடத்திய கே.சிவாஜிலிங்கம் இன்று காலை தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

சிவாஜி தேர்தலில் போட்டியிடும் முயற்சியில் குதிக்கலாமென்ற எதிர்பார்ப்பில் ஊடகவியலாளர்கள் அவருடனும் அனந்தியுடனும் தொடர்புகொள்ள முற்பட்ட போதும் இருவரதும் கைத்தொலைபேசிகள் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கட்டுப்பணம் செலுத்துவதற்கான இறுதி கால எல்லையான இன்று சிவாஜிலிங்கம் சார்பில் அனந்தியால் கட்டுப்பணம் கட்டப்பட்டுள்ளது.அப்போது சிவாஜிலிங்கமும் பிரசன்னமாகியிருந்தார்.

No comments