விஞ்ஞாபனங்கள் வெளியான பின்னரே ஆதரவு அறிவிப்பு

ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் தங்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்ட பின்னர்தான், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

யாழில் இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் தெரிவித்த அவர், “தேர்தல் விஞ்ஞாபனங்களை அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் வெளியிட்ட பின்னர், அவற்றை பரிசீலித்து அதன் பின்னர்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவு அறிவிக்கப்படும்

ஒவ்வொரு கட்சிகளும் எமது பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்டுள்ளவற்றை ஆராய்ந்து அதன் பின்னரே முடிவெடுப்போம். அவ்வாறே கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் குறிப்பிட்டார்” என சி.வி.கே. மேலும் தெரிவித்தார்.

No comments