சற்றுமுன் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி!

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கி பிரயோகமொன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் சற்று முன்னர் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொட்டாஞ்சேனை, ஜம்பட்டா வீதியிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த ஒருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சம்பவத்தில் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உடனடியாகவே மரணமானார்.

No comments