பஸ் கவிழ்ந்து 31 பேர் படுகாயம்!

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா வனராஜா பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 31 பேர் படுங்காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (08) மாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் பகுதியிலிருந்து பொகவந்தலாவ பகுதிக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த பாடசாலை பேருந்து ஒன்று எதிரே வந்த வாகனம் ஒன்றுக்கு இடமளிக்கும்போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் பேருந்து சாரதி உட்பட 31 பேர் காயமடைந்த நிலையில், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் காயமமைந்தவர்களில் 28 பேர் மாணவ, மாணவிகள் எனவும், 3 பேர் பெரியவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments