பலாலி மக்கள் பிரச்சினையை தீருங்கள்; சேனாதி மன்றாட்டம்

பலாலி மக்களின் காணிகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. மயிலிட்டித் துறைமுகத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் இன்னும் விடுவிக்கப்பட இல்லை. அத்துறைமுகம் அவர்களுக்கு பயன்பட வேண்டும் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று (17) திறந்து வைக்கப்பட்ட போது இதனைத் தெரிவித்தார்.

மேலும்,

பலாலி விமானத் தளத்திற்கு கிழக்குப் பகுதியில் 2000 குடும்பங்கள் இன்னும் மீள்குடியேற்றப்படவில்லை. இம்மக்களும் தான் இந்த விமான நிலையத்தை பயன்படுத்த வேண்டும்.

ஆனால் அவர்கள் இன்றும் அகதிகளாக, நிலம், வீடு அற்றவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கும் நீங்கள் தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன.

இவ்விமானத் தளத்தின் முன்பக்கம் உள்ள பாதையை அமைப்பது தடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் இன்று முடிவெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளேன் - என்றார்.

No comments