லம்சம் கொடுத்த விவகாரத்தால் சசிகலாக்கு விடுதலையில்லை!

கர்நாடகா உருவான நவம்பர் ஒன்றாம் தேதியை முன்னிட்டு 141 கைதிகள் நன்னடத்தையின் பேரில் விடுதலை செய்யப்பட்டனர் . சொத்துகுவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் இருக்கும் ஜெயலலிதா தோழி சசிகலாவும் விடுதலையாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடக்கவில்லை.

ஆனால், கர்நாடக சிறைத்துறையில் இயக்குனர் நன்னடத்தை விதிமுறைகள் சசிகலாவிற்கு பொருந்தாது என்றும் . தண்டனை காலம் முழுதும் அவர் அனுபவித்த பிறகுதான் விடுதலை ஆவார் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிறையில் இருந்தபொழுது லஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடைபெற்று வந்தது. இதன் காரணமாக குறைந்தது 2 ஆண்டுகளாவது தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது. பல்வேறு வழக்குகள் வரிசை கட்டி நிற்பதால் சசிகலா காலம் முழுதும் சிறையில்தான் இருக்க வேண்டுமோ.? என அவரது ஆதரவாளர்கள் கலங்கி வருகின்றனர்.

No comments