சிறிசேவின் இரண்டு விக்கெட்டுக்கள் இன்று வீழ்ந்தது


முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் டபிள்யு.பி. ஏக்கநாயக்க ஆகியோர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் இன்று (02) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்கள் இவ்வாறு கூறினார்.

செனவிரத்ன மற்றும் ஏகநாயக்க இருவரும் பதவியில் இருந்த காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

கடந்த அரசாங்கத்தில் அதாவுத செனவிரத்ன கிராமிய விவகார சிரேஷ்ட அமைச்சராகவும் டபிள்யு.பி. ஏக்கநாயக்க நீர்பாசனத்துறை பிரதி அமைச்சராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments