காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலானி தோட்டத்தில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போன குறித்த நபர் இரண்டு நாட்களின் பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.

பொகவந்தலாவ கிலானி தோட்டப்பகுதியை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

No comments