நாம் இந்தியாவிற்குள் இருந்திருந்தால் அடக்குமுறை இருந்திருக்காது

இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருந்தால் நாங்கள் இன்று எதிர்கொண்டு வருகின்ற இன்னல்கள், ஒடுக்குமுறைகள், அடக்குறைகள் இல்லாது இருந்திருப்போம் என்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சி.வி.கே.சிஞானம் தெரிவித்தார்.

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினமான நேற்று யாழ்.போதனா வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள காந்தியின் திருவுருவச் சிலையில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர்மேலும் உரையாற்றுகையில்,

1920 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கவேண்டும் என்றொரு பேச்சு இருந்தது. காந்தி அடிகளின் தலைமைத்துவத்தின் கீழ் அரசியலை எடுத்துக்கொண்ட அரசியலுடன் சம்பந்தப்பட்டவன் என்ற வகையில் எங்களுடைய தலைவரான தந்தை செல்வாவையும் ஈழத்துக் காந்தி என்று அழைக்கப்படுகின்ற நிலையான அரசியலை தொடர்பு படுத்தி அவர்கள் வழியில் செயற்பட்டு வருகின்ற எங்களுக்கு விடுதலை கிடைக்கவில்லை இந்த விடையம் இந்திய அரசுக்கும் நன்றாகத் தெரியும்.

நாங்கள் தற்போது எத்தகைய நிலையில் அரசியலைக் கையாழ்கின்றோம் என்பதும் தெரியும் ஆகவே எங்கள் கேரிக்கைகள் அபிலாசைகள் பெற்றுக்கொள்வதற்காக கொண்டு வரப்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டத்தை வரவேற்கின்றோம்.அதனுடைய முழுமையான அமுலாக்கத்தை அதற்கான பங்களிப்பையும் உறுதிப்பாட்டையும் இந்திய அரசாங்கம் நிச்சயமாக செய்யும் என நம்புகின்றேன்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி தமிழ் மொழில் கணிசமான பற்றுக்குக் கொண்டவர் அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் போது மூவாயிரம் வருடத்திற்கு முன்னதாக பாடப்பட்ட யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பாடலை தமிழில் பாடி தமிழைப் பெருமைப்படுத்தியவர் எங்களுடைய கோரிக்கைகளை உணர்வுகளை எமது எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு இந்திய தேசம் இந்திய அரசு இந்திய மக்கள் காந்தியின் பெயரால் எமக்கு உதவ வேண்டும். காந்தியடிகள் எடுத்துக்காட்டிய சுதந்திர விடுதலை எங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்றார்.

No comments