முதலிடம் மகாநாயக்க தேரர்களிற்கே?


புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச,  தனது தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிகளை, மல்வத்த மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்கர்களிடம் சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் அறிக்கை, நாளை மறுநாள் கண்டியில் வெளியிடப்படும் என்று, அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், கண்டியில் தமது தேர்தல் அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை என்றும்,  சாதாரண மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளக் கூடிய தலைவர் அவர் என்றும், லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.

No comments