கோட்டாவிற்கு பதிலாக சஜித் என்பது முட்டாள்தனம்?


கோட்டாபயவைத் தோற்கடிக்க வேண்டுமானால் சஜித்துக்கு வாக்களியுங்கள் எனப் பிரசாரம் செய்கின்றனர். 2015ஆம் ஆண்டில், இதே மக்கள்தான் மஹிந்த கொட்டத்தை அடக்கியவர்கள் என்பதை சஜித் தரப்பு மறந்துவிட்டது. ஏற்கெனவே தோற்கடித்தவரை மீண்டும் தோற்கடிக்க வேண்டுமெனக் கோருவது வெட்கக்கேடானது. 

'நம்பிக்கையுடன் இருந்த மக்களை இந்த அரசாங்கம் நடு வீதியில் விட்டுவிட்டது. அதனை மறைப்பதற்கு மீண்டும் பொய்களைக் கூறத் தொடங்கியிருக்கிறார்கள். இதனை மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்' என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு மஹிந்தவின் கொட்டத்தைத் தோற்கடித்த நிலையில், மீண்டும் அவரைத் தோற்கடிப்பதற்காக சஜித்துக்கு வாக்களியுங்கள் என்று கோருவது அபத்தமானதென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
'இந்த நாட்டுக்கு இரண்டுவிதமான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. ஒன்று, வெளிநாடுகளின் அழுத்தம். அதனை ஒருபோதும் நாங்கள் ஏற்கப்போவதில்லை. அந்த அழுத்தங்களைக் கையாழுவது மிக முக்கியமானது. மற்றையது, தீவிரவாத நடவடிக்கைகள். தீவிரவாத நடவடிக்கை என்பது, தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற பலம்கொண்ட அமைப்பாக உருவாகும் சாத்தியம் இல்லை. 

'சிறு குழுக்களாகத் தீவிரவாதம் உருவாகலாம். அதனை அடக்குவது பீல்ட் மார்சல் போன்றவர்கள் தேவையில்லை. சிறு தீவிரவாதத்தை அடக்குவதற்கு முழுப் பலத்தையும் பிரயோகிக்க நினைப்பது தேவையற்ற வீண்விரயமாகும்' எனவும் மேலும் தெரிவித்தார்.


No comments