வல்லரசுகள் பிடியில் தவிக்கும் குர்திஷ்! அமெரிக்க வெளியேற நுழைந்தது ரஷ்யா!

சிரியாவுக்கும் துருக்கிக்கும் இடையே குர்திஷ் மக்களின் எல்லைகளில் இருந்து அமெரிக்க தனது படைகளை விலக்கியதனால் துருக்கிப்படைகள் குர்திஷ் மக்கள் மீது தங்கள் தாக்குதலை தொடுத்தனர் , இதற்க்கு எதிர் தாக்குதலை குர்திஷ் ஜெனநாயக படையும் நடத்தியது , இதனால் அப்பிராந்தியத்தில் போர் மேகம் சூழ்ந்தது , நூற்றுக்கணக்கான மக்களும் பலியாகி காயங்களும் ஏற்பட்டு இரண்டு இலட்ச்சதிற்கு அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து அகதியகினர்.

அமெரிக்க மற்றும் பல்வேறு நாடுகள் போர்நிறுத்தம் வலியுறுத்தி துருக்கியை வலியுறுத்தினர் இதன் பிரகாரம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது ,

இந்நிலையில் ரஷ்ய இராணுவப் போலீஸ்துறை, யூப்ரடிஸ் நதியைக் கடந்து சிரிய-துருக்கி எல்லையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

"ரஷ்ய இராணுவப் பொலிஸ் பிரிவுகள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஒழுங்கை நிலைநாட்டவும் உதவுவதாகவும், அப்பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்கும் மற்றும் துருக்கிய எல்லையில் இருந்து 30 கிலோமீட்டர்கள் அப்பால் உள்ள YPG படைகளை திரும்பப் பெற வழிவகை செய்யும்" என்று அமைச்சரகத்தின் அறிக்கை கூறுகிறது.

செவ்வாயன்று ரஷ்ய கடற்கரை நகரமான சோச்சி பகுதியில் ஆறு மணிநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர், ஜனாதிபதியின் விளாடிமீர் புட்டின் மற்றும் ரெசெப் தயிப் எர்டோகன் நடத்திய உடன்பாட்டின் கீழ், ரஷ்ய இராணுவப் போலீசாரும் சிரிய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும், YPG போராளிகள் திரும்பப் பெறப்படுவதைக் மேற்பார்வையிகின்றனர் , சிரியாவில் குறைந்தது 30 கி. மீ., மதியத்திலிருந்து தொடங்கி அக்டோபர் 23 150 மணி நேரத்திற்குள் குர்திஷ் பிரிவுகளை அகற்ற வேண்டும் என்றும் அதுவரை துருக்கி தாக்குதல் நடத்தது என்று தெரிவித்துள்ளது.

No comments