சுகாதார அமைச்சின் விசமச் செயலை எதிர்த்து மக்கள் போராட்டம்

வடக்கு மாகாண சுகாதார அமைச்சிடம் இருந்து எம்மை காப்பாற்றுங்கள் எனக் கோரி பண்ணைப் பகுதி மக்கள் சுகாதார அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் நேற்று (29) மாலை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் அமைந்துள்ள வடமாகாண சுகாதார அமைச்சின் அலுவலக வளாகத்தில் (சுகாதாரக் கிராமம்) காலவதியான மருந்து பொருட்களை பிளாஸ்ரிக் போத்தல்களுடன் குழி தோண்டி அதனுள் போட்டு நேற்று முன் தினம் இரவு தீ மூட்டியுள்ளனர்.

அதனால் பிளாஸ்ரிக் போத்தல்கள் எரிந்தும் , மருந்துகள் எரிந்தும் ஏற்பட்ட புகை மூட்டத்தால் நாற்றம் வீசியதுடன் அயலவர்களுக்கு ஒவ்வாமையும் ஏற்பட்டு மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டனர்.

இந்த நிலையிலேயே சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் செயலைக் கண்டித்தும் தாம் உயிர் வாழ்வதற்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரியும் பண்ணைக் கிராம மக்கள், மாகாண சுகாதார அமைச்சின் நுழைவாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No comments