நாமலை வைத்திருப்பது யார்?


தமிழகத்தின் பிரபல கவுண்டமணி-செந்தில் நகைச்சுவையை மிஞ்சியிருக்கிறது யாழ்ப்பாணத்தில் நாமலை யார் வைத்திருப்பதென்ற விவகாரம்.

சொப்பன சுந்தரியை வைத்திருப்பது தொடர்பிலான நகைச்சுவையாக அது முற்றியிருக்கின்றது.

2015 ஆட்சி மாற்றத்தின் பின்னராக ஈபிடிபி மகிந்தவை கைவிட்டு மைத்திரியுடன் டீல் முடிக்க முற்பட்டது.ஆனாலும் சுமந்திரன் தரப்பு அதற்கு ஒத்துழைக்காமையால் டக்ளஸின் ,மைத்திரி அமைச்சரவையில் அமைச்சராகும் கனவு தோல்வியில் முடிந்திருந்தது.

இந்நிலையில் டக்ளஸ் தரப்புடன் முரண்பட்ட அக்கட்சியை சேர்ந்த ரஜீவ் என்பவர் பொதுஜனபெரமுனவின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.அவருடனேயே நமால் முதல் அமைச்சர்கள் ஈறாக யாழ்ப்பாணத்தில் அரசியல் செய்யும் நிலைதோன்றியிருந்தது.

ரஜீவ் மகேஸ்வரி மண் நிதியத்தில் கோடிகளில் பணத்தை மோசடி செய்ததாக டக்ளஸ் குற்றஞ்சாட்டிவந்த நிலையில் அவரே தற்போது பெரமுனவின் அமைப்பாளராக உள்ளார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த நாமலை டக்ளஸ் வைத்திருப்பதா அல்லது ரஜீவ் வைத்திருப்பதா அல்லது இடையில் ஒட்டியிருக்கும் வரதர் வைத்திருப்பதாவென்ற மோதல் நீடித்திருந்தது.

இறுதியாக நாளொன்றுக்கொருவருடன் என நாமல் பகிர்ந்தளிக்கபட்டு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.  

No comments