யாழில் தாய் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் - கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் உள்ள வீடொன்றில் மூன்று பிள்ளைகளின் தாயொருவரின் (61-வயது) சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த வீட்டில் இருந்து நகைகளும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments