இராணுவம் சார்பில்லாமல் செயற்பட வேண்டும்- தேசப்பிரிய

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் இராணுவம் நடுநிலையாக செயற்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக, இராணுவத் தளபதியின் ஒளிப்படம் மற்றும் கருத்துக்களுடன், தேர்தல் விளம்பரங்கள் வெளியிடப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வாறு கூறியுள்ளது.
தனது பழைய படம் மற்றும் கருத்துக்கள், தனக்குத் தெரியாமல் தேர்தல் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா விளக்கம் அளித்திருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இந்த தேர்தலில் எந்த வேட்பாளரையும் தாங்கள் ஆதரிக்கவில்லை என்று இராணுவத் தளபதி உறுதியளித்துள்ளார் என கூறினார்.
எனவே, கடந்த காலங்களைப் போல, நடுநிலையாக இருப்பதன் மூலம் இந்தத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவுக்கு இராணுவம் உதவும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

No comments