அரசியல்வாதியின் துணையுடன் காணி அழிப்பு?

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இருட்டுமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் காணிகள் அழிக்கப்பட்டு வருவதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பாதிக்கப்பட்ட மக்கள், அரசியல்வாதி ஒருவரின் துணையுடன் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக குற்றம்சாட்டினர்.
மேலும் இதற்கு பொலிஸாரும் தமது ஒத்துழைப்பை வழங்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
பிரதேசத்தில் இருக்கின்ற மக்கள் பலர் விவசாய காணிகள் இல்லாது இருக்கின்றபோது வேறு ஒரு இடத்தில் இருந்து வருபவர்களுக்கு அதிகமான காணிகள் வழங்கப்படுவது கவலைக்குரியது எனவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீர்வை வழங்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments