மக்கள் பிரச்சினைக்காக நாம் மூவரும் சென்று சண்டை பிடிப்போம்

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடனே மலையகத்தில் ஜனாதிபதி செயலனி ஒன்றை அமைத்து தருவதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமேதாச உரறுதியளித்துள்ளதாக அமைச்சர் மனோகனேசன் தெரித்துள்ளார்.

அட்டன் டி. கே. டபூல்யூ கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மனோகனேசன்,

மலையகத்தில்  அமைக்கபடவிருக்கின்ற ஜனாதிபதி செயலனி ஊடாக மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதாரம். கலாசாரம். அனைத்து பிரச்சினைக்கும் தீர்வினை கான இந்த செயலனி அமைக்கபட உள்ளது இந்த நாட்டில் நல்லாட்சி அரசாங்கம் உருவாகிய பிறகுதான் எமது தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடாக மலையகத்தில் அடிப்படை மாற்றம் அரசில் மாற்றம் அனைத்தையும் கொண்டு வந்தது கடந்த காலங்களில் மலையக மக்களை ஒதுக்கி வைத்து தேசிய நீரோட்டத்தில் கலக்காமல் வைத்த தலைவர்களை தகர்த்து எறிந்து விட்டு நாங்கள் வந்த பிறகு மலையக மக்களை நாங்கள் தேசிய நீராட்டத்தில் கொண்டுவந்துள்ளோம்.

மலையக மக்களும் இந்த நாட்டின் குடிமக்கள் என பாராளுமன்றிலும் தேசியமட்டத்திலும்  குரல் ஒலிக்கிறது இன்று எமது தமிழ் முற்போக்கு கூட்டணியின் உறுப்பினர்களின் ஊடாக மலையகத்தின் ஆதங்கம், ஆவேசம், துயர், கண்ணீர் என்பன மூன்று மொழிகளிலும் ஒலிக்கிறது.

எமது மக்களின் பிரச்சினைகள் தேசிய ரீதியில் ஒலிக்காவிட்டால் நானும் அமைச்சர் திகாம்பரம், இராதகிருஸ்னண் மூன்று பேரும் சென்று சண்டை பிடிப்போம். நாங்கள் வாக்களித்து ஜனாதிபதி அல்லது பிரதமரை உருவாக்கினால் அந்த அரசாங்கத்தின் ஊடாக எமது மக்களுக்கு அனைத்து வளங்களும் கிடைக்கவேண்டும். நாங்கள் சலாம் போடவோ கைகட்டி கொண்டு சேவை செய்யவோ இல்லை அந்த காலம் மாறிபோய்விட்டது.

எங்களது நான்ங்கரை வருட காலபகுதியில் ஏழு பேர்ச் கானியில் தனிவீட்டுத்திட்டம் கானி உறுதிபத்திரம் அனைத்தும் வழங்கபட்டுள்ளது கடந்த வாரம் தமிழ் முற்போக்கு கூட்டணி எமது நண்பர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமேதாச அவர்களை சந்தித்தோம் அதன் போது பல்வேறு விடயங்களை நாம் கோரிக்கையாக முன்வைத்துள்ளோம். தேசிய கானிவழங்கல் திட்டத்திலே மலையக மக்கள் உள்வாங்கபட வேண்டும் தோட்டபுறங்களில் தொழில் புரிவோர்கும் தொழில் புரியாதவோர்கும் ஏழு பேர்ச் கானி கட்டாயம் வழங்கபட வேண்டும் மலையக மக்கள் தேசிய வீடமைப்பு திட்டத்தில் உள்வாங்கபட வேண்டும் போன்ற கோறிக்கைகளை முன்வைத்துள்ளோம் நுவரெலியா மாவட்டத்தில் வெகுவிரைவில் பல்கலைகழகம் அமைக்கபடும்.

இலங்கையில் தேயிலை ஏற்றுமதியில் ஏழுபது வீதம் வருமானம் சிரறு தோட்டதுறையில் தான் வருகிறது ஆகையால் தோட்ட தொழில் துறை புனர்நிர்மாணம் செய்யபட வேண்டும் என தெரிவித்தார்.

No comments