புலிகளுடன் தொடர்பு மேலும் ஐவர் கைது!

விடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் மேலும் 5 பேர் பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி மலாக்காவில் இரண்டு பேரையும் பினாங்கில் இரண்டு மற்றும் சிலாங்கூரில் ஒரு சந்தேக நபரையும் பயங்கரவாத தடுப்பு பிரிவு நேற்று (12) கைது செய்துள்ளது.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்று நடைபெறும் ஊடக சந்திப்பில் அறிவிக்கப்படும் என பொலிuஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த வியாழக்கிழமை இரு அரசியல்வாதிகள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments