கிட்டுபூங்கா வேண்டாம்:இடம்மாறிய கோத்தா கூட்டம்?


யாழ்ப்பாணத்தில் கோத்தா பங்கெடுக்கும் கூட்ட மைதானம் கிட்டுபூங்காவிலிருந்து அருகாகவுள்ள றக்காவீதி மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

முன்னதாக கிட்டுபூங்காவை ஈபிடிபி பரிந்துரைத்திருந்த போதும் கிட்டு பெயரை பற்றி அறிந்து கொண்ட கோத்தா பின்னடித்ததாக தெரியவருகின்றது.
இதனையடுத்து யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாக றக்காவீதியிலுள்ள பகுதிக்கு பிரச்சார கூட்டம் மாற்றப்பட்டுள்ளது.

2000ம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் ஈபிடிபியால் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை சூத்திரதாரிகள் அப்பகுதியிலேயே பதுங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாளை கூட்டத்திற்கு சட்ட பிரச்சினையினை முன்னிறுத்தி கோத்தபாய வருகை தரப்போவதில்லையென மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.

No comments