கோத்தாவிற்கு புலனாய்வு பிரிவு ஆதரவு!


கோத்தபாயவின் வெற்றிக்காக புலனாய்வு பிரிவினர் முழு அளவில் களமிறங்கியுள்ள நிலையில் புலனாய்வு அதிகாரிகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட்டு, பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதாக  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று (21) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், 'நாட்டின் பாதுகாப்பை மீண்டும் வழங்க இந்த அரசாங்கதால் முடியாது. அது தொடர்பில் தெளிவு உள்ள, இறுதி யுத்தத்தை நிறைவு செய்த எமது தரப்பினருக்கே அதனை செய்ய முடியும். 

'நான் பதவிக்கு வந்தவுடன், புலனாய்வு அதிகாரிகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், புலனாய்வு அமைப்பை வலுப்படுத்தி நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவேன்' என்றார்.

இதனிடையே விடுதலைப்புலிகளது முன்னாள் போராளிகளில் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து செயற்பட்ட சிலர் தற்போது கோத்தாவின் பிரச்சார நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

No comments