பாரிஸ் காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல்! 4 காவலர்கள் பலி;

பிரான்ஸ் பரிஸ் காவல்துறை தலைமையகத்துக்குள் ஆயுதத்துடன் நுழைந்த மர்ம நபர் ஒருவர்காவல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்
இன்று வியாழக்கிழமை 13:00 மணி அளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் கத்தி ஒன்றின் மூலம் காவல்துறை அதிகாரியை தாக்கியிருந்ததாகவும் இதில் 4 காவலர்கள் பலியாகியுள்ளனர்.
சக அதிகாரி ஒருவர் அந்த ஆயுததாரியை சுட்டு வீழ்த்தியதாகவும் அறிய முடிகிறது. இந்த தாக்குதலை நடத்தியவர் காவல்துறை தலைமையகத்தில் பணியாற்றிய ஒருவரே என ஒரு பிரெஞ்சு காவல்துறை தொழிற்சங்க அதிகாரி கூறினார்.

No comments