கையை பிடித்து இழுத்த தகவலால் ஏற்பட்ட பதற்றம்

கண்டி மஹய்யாவ நகரில் நேற்று (24) இரவு ஏற்ப்பட்ட பதற்ற நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிங்கள யுவதி ஒருவரது கையை பிடித்து இழுத்தார் என்று பரவிய தகவலையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக பொலிஸாரால் நிலமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் இதன்போது முஸ்லிம் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments