கோத்தாவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை இன்று (25) நெலும்பொக்குன தாமரைத் தடாக அரங்கில் வெளியிட்டார்.

குறித்த விஞ்ஞாபனத்தில் உள்டக்கப்பட்டுள்ள சில அம்சங்கள் கீழ் வருமாறு,

- வட் வரி 8% ஆக குறைக்கப்படும்.

- உற்பத்திக்கான வருமான வரி குறைக்கப்படும்.

- பொருளாதார கட்டணங்கள் மற்றும் நிறுத்தி வைக்கும் வரிகள் இரத்து.

- வழிப்பாட்டுத் தலங்களுக்கான வரி ஒழிப்பு.

- வாகனங்களுக்கான வரிகள் எளிதாக மாற்றப்படும்.

- காலவதியான அனைத்து விதிமுறைகள் மற்றும் நிறுவனங்கள் புதுப்பிக்கப்படும்.

- இலங்கையை தெற்காசியாவின் வணிக மையமாக மாற்றப்படும்.

- பொதுத்துறை மற்றும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்திற்கு விதிக்கப்படும் வரி இரத்து.

- பெரிய மற்றும் சிறிய ஆறுகளை மறுசீரமைக்கப்படும்.

- பெருந் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் வழங்கப்படும்.

No comments