கிட்டு பூங்காவில் பேசுகின்றார் கோத்தா?


யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் முத்திரைசந்தி கிட்டுபூங்காவில் நடைபெற இருக்கும் பரப்புரை கூட்டத்தில் பங்கெடுக்கவுள்ளனர். எதிர்வரும் 28ம் திகதி யாழ் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள அவர்கள் கிட்டு பூங்காவில் உரையாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருவதாக ஏற்பாடுகளை முன்னெடுத்துவரும் வடமாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா தெரிவித்தார்.

அன்றய தினம் நடைபெவுள்ள பிரச்சாரக் கூட்டங்களை வெகு விமர்சையாக நடாத்துவது தொடர்பில் கோட்டபாயவின் வெற்றிக்காக உழைத்துவரும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து வடமாகாண ஏற்பாட்டாளர் ரெஜினோல்ட் குரே சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

இதனிடையே கிட்டுபூங்காவில் கோட்டாவை பேச வைக்க மேற்கொள்ளவேண்டிய முனனேற்பாடுகளை தவராசா நேரடியாக செய்துவருகின்றார்.

No comments