கோத்தா முடிவு தருவார் என்கிறார் டக்ளஸ்!


13 ஆவது தீர்வு திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன் தமிழ் மக்களின்; அதிகளவான பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணவுள்ளதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களை தேவையற்ற கதைகளையோ பரப்புரைகளையோ செய்து ஏமாற்றிக்கொண்டிராது தெளிவான நேர்மையான கருதுக்களையும் வாக்குறுதிகளையும் கூறி அவர்களது வாக்குகளை பெற்று பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது மக்களது ஆதரவை இழந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களை ஏமாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ஒரு நாடகம் தான் தற்போதைய ஐந்து கட்சிகளின் கூட்டும் அவர்கள் முன்வைத்துள்ள 13 நிபந்தனைகளும்.

இந்த 13 நிபந்தனைகளையும் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு ஜனாதிபதி வேட்பாளரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

தமிழ் மக்களுக்கு தற்போது சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் சரியாக பயன்படுத்தி கோட்டபய ராஜபக்சவை வெற்றிபெறச் செய்யவேண்டும்.

எமக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஷவுக்கும் இடையே நீண்டகால புரிந்துணர்வு உள்ளது.கோட்டபய ராயபக்சவின் வெற்றியில் நாமும் பங்கெடுப்போமானால் 13 ஆவது தீர்வு திட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன் தமிழ் மக்களிம் அதிகளவான பிரச்சினைகளுக்கும் தீர்வுகண்டுதருவோம் எனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

No comments