சிவாஜிக்கு எதிர்ப்பாம்:பேரணிக்கு தடை?


35 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,  இரண்டு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவை இரண்டும் நிராகரிக்கப்பட்டதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அதன்படி, நவம்பர் 16ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், அன்றைய தினம் முற்பகல்  7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை வாக்களிப்பு இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட இன்று முதல் 7 நாட்களுக்கு பேரணிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை மீறி பேரணிகள் நடத்தப்பட்டால் நீதிமன்றுக்கு அறிவிக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.
இன்று 35 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், இரண்டு மனுக்களுக்கு எதிராக எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.
சுயாதீன வேட்பாளராக போட்டியிடுத் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இந்த எதிர்ப்புகள் முன்வைக்கப்பட்டன.
எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு எதிராக பத்தரமுல்லே சீலரத்ன தேரர் எதிர்ப்பினை முன்வைத்தாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக சரத் மனேமேந்திரா என்பவர் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
எவ்வாறியினும், இந்த இரண்டு எதிர்ப்புகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் நிராகரிக்கப்பட்டன.
பத்தரமுல்லே சீலரத்ன தேரர் மற்றும்  சரத் மனேமேந்திரா ஆகிய இருவரும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments