பங்காளிச்சண்டை:நாறிப்போன கோத்தா பிரச்சார மேடை?


ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான கோத்தாவின் யாழ்ப்பாண வருகை பங்காளிக்கட்சிகளது குத்துவெட்டுக்களால் பிசுபிசுத்துப்போயுள்ளது. பாதுகாப்பு கெடுபிடிகள் மத்தியில் பாதுகாப்பாக கோட்டை படைமுகாமினுள் வந்திறங்கிய கோத்தபாய யாழ்.மாவட்ட செயலகத்தை அண்டிய றக்காவீதி பொது மைதானத்திற்கு பாதுகாப்பாக வந்து சேர்ந்திருந்திருந்தார்.

இதனிடையே தமது செல்வாக்கை காண்பிக்க டக்ளஸ்,அங்கயன்,வரதராசாப்பெருமாள் மற்றும் ரசீவ் என தமது  நிலைகளை தக்க வைக்க பாடுபடவேண்டியிருந்தது.

குறிப்பிடத்தக்க ஆளணியினை டக்ளஸ் கொண்டு வந்திருந்த போதும் மேடையில் எங்குமே டக்ளஸினது கட்அவுட்கள் இருந்திருக்கவில்லை.

ஆனால் அங்கயனும் ,ரசீவும் தமது கட்அவுட்களால் மைதானத்தை நிறைத்திருந்தனர்.

டக்ளஸ் தான் அழைத்துவந்த ஆதரவாளர்களிற்கு கோழிப்புரியாணிகளை பேருந்துகளில் வைத்து விநியோகிக்க அதனை பெற்றுக்கொள்ள அங்கயனின் கூட்டம் முண்டியத்த பரிதாபமும் நடந்தது.

ஆட்களேயற்ற ரசீவ் தனது கட்டவுட்களை அருகாக வைத்ததுடன் கோத்தாவுடன் ஒட்டிக்கொள்ள டக்ளஸின் முகத்திலோ வெடி வெடித்தது.

டக்ளஸின் மகேஸ்வரி நிதிய பணத்துடன் ஓடிப்போனவனென ஈபிடிபியினர் ரசீவை திட்டித்தீர்த்தனர்.

மேடையில் எங்குமே ஆளாளுக்கு அவர்கள் இருவரும் நேருக்கு நேரில் சந்திப்பதை தவிர்த்தனர்.  

ஏற்கனவே ஆளாளுக்கு போட்டுப்பிடித்துக்கொண்ட டக்ளஸ்-அங்கயன் தரப்பும் அதே போல ஆளாளுக்கு ஒரு திசையில் முகத்தை திருப்பிக்கொண்டனர்.

அனைவரையும் இணைக்க முன்னாள் வடக்கு ஆளுநர் கூரே பாடுபட்டுக்கொண்டிருந்தார். 

ஆளாளுக்கு ஒரு திசையில் திரிய வெறுமனே கடமைக்கு வந்து திரும்பும் நிகழ்வாக கோத்தாவின் யாழ்.வருகை அமைந்திருந்தது.

No comments