கோத்தா சென்ற இடமெல்லாம் சிறப்பு?


ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வவுனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததை கண்டித்து, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
982ஆவது நாளாக காணாமல்போன உறவினர்களால் சுழற்சிமுறை போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக இன்று (28) மாலை 3.30 மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டக்காரர்கள், அமெரிக்க - ஐரோப்பிய கொடிகளை தாங்கியிருந்ததுடன் “கோட்டாபய, தமிழர்கள் உங்களை ஒருபோதும் மறக்கோம், மன்னிக்கோம், அனுபவித்த துன்பங்களை தமிழர்கள் மறக்க மாட்டார்கள், 145,000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள், 80,000 பெண்களை விதவைகளாக்கினாய், 50,000 தமிழ் குழந்தைகள் அனாதைகளானார், 33,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள்” போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

No comments