இம்முறை அச்சிடப்படும் வாக்குசீட்டின் நீளம் இரண்டடி?


ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடும் பணி நேற்று (09) ஆரம்பிக்கப்பட்டதாக அரச அச்சக பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
35 வேட்பாளர்களின் பெயர்களுடன் இந்த வாக்குச் சீட்டு அச்சிடப்பட ஆரம்பித்துள்ளதாகவும் சுமார் ஒரு கோடியே 60 லட்சம் வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற 10 நாட்களுக்கு முன்னர் சகல வாக்குச் சீட்டுக்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெரும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.  
இம்முறை அச்சிடப்படும் வாக்குசீட்டின் நீளம் இரண்டடிக்கும் மேலாகுமென்பது குறிப்பிடத்தக்கது.

No comments