செஞ்சோலை காணி விவகாரத்திற்கு தீர்வு வழங்குவாராம் டக்ளஸ்


செஞ்சோலை காணி விவகாரத்தில் உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வேன் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இன்று (13) காலை, குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த காணியில் வசித்துவரும்  54 குடும்பங்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதனைத் தொடர்ந்து காணியின் உரிமம் தொடர்பாக தீர்க்கமான தீர்வொன்றை பெற்றுத்தருவதாக அவர்  மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

காலம் கடந்த நிலையில் குறித்த பிரச்சினையை என்னிடம் தந்துள்ளீர்கள். இந்த பிரச்சினை முன்கூட்டியே எனக்கு கிடைத்திருந்தால் தீர்வை உடனே பெற்றுத்தந்திருக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நான் அரசியலில் தற்போது இல்லை. கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இந்த பிரச்சினை தொடர்பாக உயர்மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன் எனவும் டக்ளஸ தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை செய்து முடிப்பதற்கு குறிப்பிட்ட காலம் தேவைப்படும். புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதை அடுத்து இப்பிரச்சினைக்கு நிரந்தரமானதும் திருப்திகரமானதுமான தீர்வை பெற்றுத் தருவேன் எனவும் செஞ்சோலை சமூகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி அளித்துள்ளார்.

No comments