தேரரின் இறப்பால் பிள்ளையார் ஆலய மேன்முறையீடு தள்ளுபடி

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொடர்பாக முல்லைத்தீவு நீதவானால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரான மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் வவுனியா மேல் நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

வழக்கினுடைய முதலாவது தரப்பினராகிய புத்த பிக்கு மரணம் அடைந்த காரணத்தினால் அந்த வழக்கின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதே விடயம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனுவும் புத்த பிக்குவின் மரணத்தோடு அவருடைய மரண சான்றிதழ் நீதிமன்றத்திலே சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையிலே இரத்து செய்யப்பட்டது.

வவுனியா மேல் நீதிமன்றத்திலே இடம்பெற்றுவந்த செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் சம்பந்தமான இரண்டு வழக்குகளும் முடிவுக்கு வந்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர்.

No comments