சுற்றுச்சூழலை பாதுகாக்க, மரம் நடும் பணியில் சீன இராணுவம்;

சீனாவின் வடக்கு எல்லையில் பணியமர்த்தப்பட்டிருந்த ஒரு பெரிய படைப்பிரிவு மற்றும் ஆயுதம் தாங்கிய காவல் படையின் சில பிரிவுகள் ஆகியவை தங்களின் வழக்கமான பணியிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டு, உள்நாட்டில் ராணுவம் சாரா மரம் நடும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டின் வனப்பரப்பை அதிகமாக்கவும், சுற்றுச்சூழல் சீர்கேட்டைக் கட்டுப்படுத்தவும் மரங்களை நடுவதற்காக, 60,000 ராணுவ வீரர்களை சீன அரசு பணியமர்த்தியுள்ளதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களின் பெரும்பான்மையோர், ‍ஹெபேய் மாகாணத்திற்கு அனுப்பப்படவுள்ளதாகவும், ஏனெனில் அந்தப் பிராந்தியம்தான் தலைநகர் பெய்ஜிங்கை சுற்றி அமைந்திருப்பதாகவும், மோசமான சுற்றுப்புற சீர்கேட்டிற்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் நிறைவுக்குள் 84000 சதுர கி.மீ. அளவுள்ள பரப்பில் மரங்களை நடவ‍ேண்டுமென்று திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்தப் பரப்பளவு என்பது அயர்லாந்து நாட்டின் மொத்தப் பரப்பளவுக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments