போதைப் பொருளுடன் தாய், மகள் கைது!

சென்னையிலிருந்து இரண்டரை கோடி பெறுமதியான ஐஸ் போதைப் பொருளை கடத்திவந்த இலங்கையர்களான தாயும் மகளும் விமான நிலைய சுங்கத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

நேற்றிரவு 10 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள் வத்தளை, மட்டக்குளியைச் சேர்ந்த 68 வயதான தாயும், அவரது மகளான 38 வயதான பெண்ணொருவரும்  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments