தேர்தல் சட்ட மீறல்; 26 மாணவர்கள் கைது

Pic DM
கொழும்பு - லோட்டஸ் வீதியை மறித்து பல்கலைகழக மாணவர்களினால் முன்னெடுப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 26 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல் காலத்தில் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காரணத்தினால் குறித்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹபொல புலமைபரிசில் மாதந்த தொகையை அதிகரிக்குமாறு கோரியும் காலதாமதம் இன்றி வழங்குமாறு கோரியும் பல்கலைகழக மாணவர்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மருதானையில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் நடை பவணியில் சென்றுள்ளதுடன் பொலிஸார் லோட்டஸ் சுற்றுவட்டத்தில் வீதித் தடைகளை போட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தடைகள் மீறி வெல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்காக கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.

No comments