தம்பதியை மிரட்டி பணம் பெற்ற காவற்துறை அதிகாரி

பொரலஸ்கமுவ, வெரஹெர பிரதேசத்தில் தம்பதியரை மிரட்டி 30,000 ரூபாவை பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உந்துருளியொன்றின் மூலம் வருகைத்தந்த குறித்த காவல்துறை அதிகாரி, அஹங்கம பிரதேசத்தில் வசித்து வந்த தம்பதியினரை அச்சுறுத்தி பணத்தை பெற்றுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு பணம் பெற்றுக்கொண்ட காவல்துறை அதிகாரி கல்கிஸ்ஸ காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவரென்பது குறிப்பிடத்தக்கது.

No comments