விபத்தில் இருவர் பலி!

பொரலஸ்கமுவ பெப்பிலியான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெப்லியான் பகுதியில் காரொன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

No comments