விபத்தில் இருவர் படுகாயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாமஸ்டன் பிரதேசத்தில் கார் ஒன்று மண்மேட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.

இன்று (05) மாலை நுவரெலியா பகுதியிலிருந்து ஹற்றன் பகுதியை நோக்கி செல்லும் போது பிரதான வீதியை விட்டு விலகிய கார் மண்மேட்டில் மோதுண்டது.

குறித்த காரில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments