அனைவருக்கும் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவேன் - அஜந்தா

நாட்டில் இதுவரை ஆட்சிசெய்த அனைவரும் அபிவிருத்தி செயற்பாடுகளில் தோல்வியையே தழுவியுள்ளனரென இலங்கை சோசலிச கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அஜந்தா பெரேரா தெரிவித்துள்ளார்.

பெப்ரல் அமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (05) இடம்பெற்ற மக்கள் மேடை நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்,

யுத்தத்திற்குப் பின்னர் நாட்டில் அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென எதிர்பார்த்தோம். ஆனால் எவ்வாறான நிலையில் நாம் இருக்கின்றோம் என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும் தொழிற்சாலைகள் அனைத்தையும் மூடிவிட்டு அபிவிருத்தியை ஏற்படுத்த முயலுவது இயலாத காரியமாகும். அத்துடன் நாட்டின் அபிவிருத்திக்கு வெளிநாடுகளின் உதவியில் தங்கியிருக்க வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது.

ஆகையால் இவ்வாறான விடயங்களில் இருந்து மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பாதையை நோக்கி இலங்கையை கொண்டுச் செல்வேன். மேலும் இளைஞர் யுவதிகளுக்கு உரிய முறையில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பேன் - என்றார்.

No comments