திடீர் திருப்பம்: கோத்தாவை தோற்கடிக்க சஜித்துடன் இணைந்தது ஐக்கிய இடது முன்னணி

சஜித் பிரமேதாசவுக்கு ஆதரவு வழங்கும் ஐக்கிய இடது முன்னணியின் மறு தீர்மானம் மத்திய செயற்குழுவில் இன்று (24) நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கட்சியின் தேசிய அமைப்பாளர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னதாக இக்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்கவுக்கு ஆதரவு வழங்கியிருந்தது. இந்நிலையில் தமது ஆதரவை இன்று மறுதீர்மானம் மூலம் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கியுள்ளனர்.


இது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

"கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் அவரின் பின்னால் இருக்கும் அடிப்படைவாத குழுக்களினால் இலங்கையின் ஜனநாயகம் ஆபத்துக்கு உள்ளாகலாம் என்ற அடிப்படையில் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டுமென அழைப்பு விடுத்திருந்த நிலையில் கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிக்க கூடிய திறமைமிக்க வேட்பாளர் சஜித் பிரேமதாச என்பதால் அவரை ஆதரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments