இரு கைகளாலும் ஒரேநேரத்தில் எழுதும் திறன்! அசாத்திய தமிழ் மாணவி;

பொள்ளாச்சியைச் சேர்ந்த தனுவர்ஷா, அங்கு உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு நுண்ணுயிரியல் படித்துக்கொண்டிருக்கிறார். இவர் தனது இரு கைகளிலும் ஒரே நேரத்தில் எழுவது மற்றும் ஓவியங்கள் வரைவது போன்ற அசாத்திய திறமையைத் தனது 12 ஆம் வயதிலேயே கண்டு பிடித்து தன் திறனை மேன்மேலும் வளர்த்துக் கொண்டுள்ளார். 
இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஒரேய நேரத்தில் இரு கைகளாலும் எழும் திறமைக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி, இரு கைகளாலும் ஒரேய நேரத்தில் அழகான ஓவியங்களையும் வரையும் திறன் கொண்டவர். உலகில் உள்ள அனைவருக்கும் இரு கைகளாலும் எழுதும் திறமை இருக்க வாய்ப்புக்கள் குறைவு, அதிலும் ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதுவதென்பது அதிசயம் தான்.
 தனுவர்ஷாவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக, அவரது பெற்றோர் இந்தியன் புக் ஆஃப் ரெகார்டஸ் இல் தனுவர்ஷாவின் தனித்தன்மையை இடம் பெற வைக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளதாக அம்மாணவியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். 

No comments