பிச்சை எடுக்கிறது ஐநா சபை!

ஐக்கிய நாடுகள் சபை கடும் நிதிப் பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக அதன் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ் கவலை தெரிவித்துள்ளார். அதாவது, 230 மில்லியன் டாலர் நிதிப்பற்றாக்குறை நிலவுகிறதாம்.
தற்போது ஐ.நா. அவையில் மொத்தமாக உலகெங்கிலும் 37,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்த ஊழியர்களுக்கும் பொதுச் செயலாளர் கட்டர்ஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “இந்த 2019ம் ஆண்டில் இந்த மமமன்றத்தின் உறுப்பு நாடுகள் வழக்கமான பட்ஜெட் தொகையில் 70% ஐ மட்டுமே வழங்கியுள்ளன.
இதனால், செப்டம்பர் மாத இறுதியில் 230 மில்லியன் டாலர் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், நிதிக் கையிருப்பானது மாத இறுதிக்குள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்கிறோம்.
எனவே, நிலைமையை சமாளிக்கும் பொறுப்பு உறுப்பு நாடுகளிடமே உள்ளது. மன்றத்தின் சார்பில் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநாடுகள் மற்றும் கூட்டங்களை ஒத்திவைத்தல் மற்றும் சேவைகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனாலும், சில அத்தியாவசிய நடவடிக்கைகளை நிறுத்த முடியாது. எனவே, நிலைமையை சமாளிக்க உறுப்பு நாடுகள் உதவ வேண்டும்” என்றுள்ளார்.
தேவையானப் பணத்தை வழங்குமாறு உறுப்பு நாடுகளிடம் ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள் விடுத்தும், அந்நாடுகள் அக்கோரிக்கையை நிராகரித்துவிட்டதாய் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments